சென்னை: கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை புறநகர் மின்சார ரயில்கள் முதலில் அரசு மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக இயக்கப்பட்டன. இதனையடுத்து மக்கள் கூட்டம் அதிகமில்லாத நேரங்களில், அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு பெண்களும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
தற்போது, வரும் 14ஆம் தேதி முதல் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவித நேரக் கட்டுப்பாடின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திருமால்பூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து பணியாற்றும் பெண்கள் உள்ளிட்ட பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை - ரேணிகுண்டா இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!