ETV Bharat / state

கழிவுநீர் அகற்ற ரூ.50 ஆயிரம் கையூட்டு பெற்ற பெண் கண்காணிப்பு பொறியாளர் கைது! - chennai women arrested for bribe

சென்னை: அடுக்குமாடிக் குடியிருப்புக்கு கழிவுநீர் அகற்றும் இணைப்பிற்கு ஒரு லட்சம் கையூட்டு கேட்ட பெண் கண்காணிப்பு பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கண்காணிப்பு பொறியாளர் கைது
author img

By

Published : Nov 2, 2019, 11:17 AM IST

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் 94 வீடுகளுக்கு கழிவுநீர் அகற்று இணைப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு இணைப்புத் தருமாறு அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கத்தினர் கேட்டுள்ளனர்.

ரூ.50 ஆயிரம் கையூட்டு வாங்கிய பெண் கண்காணிப்பு பொறியாளர் கைது

அவர்கள் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாரிடம்தான் இது தொடர்பான கோப்பு உள்ளது. அவர் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்றால் ஒரு லட்சம் பணம் கையூட்டு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விஜயகுமாரின் அலுவலகத்திற்கு சென்று முன்பணமாக ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதுபோல பொறிவைத்து கையும் களவுமாகப் பிடித்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:Body:*ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பு பொறியாளர் கைது.*

அடுக்குமாடி குடியிருப்புக்கு கழிவுநீர் அகற்றும் இணைப்பிற்கு ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட பெண் கண்காணிப்பு பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 94 வீடுகளுக்கு கழிவுநீர் அகற்று இணைப்பு வழங்குவதற்காக முறையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்களாக இணைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் கேட்டுள்ளனர். அப்போது கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாரிடம் தான் இது தொடர்பான கோப்பு உள்ளது என்றும் கோப்பு கையெழுத்திட வேண்டும் என்றால் ஒரு லட்சம் பணம் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த சங்கத்தினர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகி விஜயகுமார் மீது புகார் ஒன்றை அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இன்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விஜயகுமாரின் அலுவலகத்திற்கு சென்று முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல பொறி வைத்து அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அவரிடம் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் விஜயகுமாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.