ETV Bharat / state

போலி நகைகளை வைத்து தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது

சென்னை: கொருக்குப்பேட்டையில் நகை கடையில் போலி நகைகளை வைத்து தங்க நகைககள் திருடிய இரண்டு பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Jul 16, 2021, 9:25 PM IST

தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது
தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபிரியா ஜுவல்லரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் நகைகள் வாங்கச் சென்றுள்ளனர். ஆனால் பல்வேறு நகைகளைப் பார்த்தும் தங்களுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை என கூறிவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் நகைகளைச் சோதனை செய்துபார்த்தார். அப்போது அதில் செயின், கம்மல், மோதிரங்கள் கவரிங் நகையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், கொருக்குப்பேட்டை காவல் துறையினருக்கும் இதுகுறித்து புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளத் தனிப்படை காவலர்கள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து அக்கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அவர்கள், மெயின் ரோட்டில் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.

தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது

மேலும் விசாரணையில் அவர்கள் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சுமதி (55) மற்றும் அவருடைய மகள் பிரியதர்ஷினி (26) என்றும், ஏற்கனவே இதேபோன்று கடைகளில் கவரிங் நகைகளை வைத்துவிட்டுத் தங்க நகைகளைத் திருடியதும் தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 பவுன் நகைகளை மீட்டனர்.

இதையும் படிங்க: ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.