ETV Bharat / state

நில அபகரிப்பு: பக்கவாதம் பாதித்த கணவரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து பெண் புகார் - பெண் புகார்

தங்களிடமிருந்து அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி, பக்கவாதம் பாதித்த கணவரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து பெண் ஒருவர் புகாரளித்தார்.

நிலம் அபகரிப்பு
land acquisition complaint
author img

By

Published : Jul 16, 2021, 2:10 PM IST

சென்னை: ஆவடியில் உள்ள அம்பத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரோடு ஆம்புலன்ஸில் வந்த பெண் ஒருவர் புகார் அளித்தார்.

புகாரளிக்க வந்த தம்பதியினர் திருத்தணியைச் சேர்ந்தவர்கள். பெண்ணின் கணவர் பொன்னுவேலின் தந்தை வழி சொத்து திருநின்றவூரில் உள்ளது. சுமார் 9 ஏக்கர் 39 சென்ட் நிலத்தை, முறைகேடாக அங்குள்ள சிலர் அபகரித்து உள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஆவணங்களும் தற்போது வரை தங்கள் பெயரில் உள்ள நிலையிலும், சொத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொன்னுவேலுக்கு கடந்தாண்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால் அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி, பொன்னுவேலின் மனைவி புகாரளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையரை விசாரிக்க கூறுவதாக நம்பிக்கைத் தெரிவித்து இருவரையும் அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.