சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு துபாஷ் ஆக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. சட்டப்பேரவையில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு, சட்டப்பேரவை வளாகத்திலுள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டப்பேரவை வரை சபாநாயகர் செல்லும்போது முன்னே செல்வார், சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார், மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.
1990ஆம் ஆண்டு சட்டப்பேரவை அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு தற்போது 60 வயது எட்டியுள்ளது. வரும் மே மாதம் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துபாஷ் என்ற பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படும், ஆண்கள் மட்டுமே அணிந்து இருந்த இந்த சீருடையை தற்போது பெண்ணும் பயன்படுத்த தொடங்கியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை இல்லை என முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' - ஜவஹிருல்லா