ETV Bharat / state

'தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 5945 குழந்தைகள் அரசிடம் வந்துள்ளன' - அமைச்சர் சரோஜா தகவல்

சென்னை: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

அமைச்சர் சரோஜா செய்தியாளர்ச் சந்திப்பு
அமைச்சர் சரோஜா செய்தியாளர்ச் சந்திப்பு
author img

By

Published : Feb 24, 2020, 11:33 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக இந்தாண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் மணல் சிற்பம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக தனியார் கல்லூரி மாணவிகளின் நாடகம், பெண் குழந்தைகளுக்கு நேரிடும் பாலியல் வன்முறை தொடர்பான பிரச்னைகளைக் கண்முன்னே கொண்டுவந்தனர் .

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் சரோஜா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 5945 குழந்தைகள் அரசிடம் வந்துள்ளன. குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை செய்யப்பட்டு தத்து கொடுக்கப்படுகிறது. உள்நாட்டில் 3535 பெண் குழந்தைகள் 1500 ஆண் குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் சரோஜா செய்தியாளர்ச் சந்திப்பு

வெளிநாட்டு பெற்றோருக்கு 524 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டு வளர்ந்துவருகிறார்கள். இந்தாண்டு மட்டும் இத்திட்டத்தின்கீழ் 212 குழந்தைகள் வந்துள்ளனர், அவர்களில் மூன்று பெண் குழந்தைகள் மூன்று ஆண் குழந்தைகள் வெளிநாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மட்டுமின்றி ஆண், பெண் வித்தியாசம் காட்டாத மனநிலையை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு திட்டங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது” எனக் கூறினார்.

இதையும் படிங்க...இந்தியாவுடன் 300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.