ETV Bharat / state

நள்ளிரவில் சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு செய்த பெண் காவல் அதிகாரி!

சென்னையில் இரவு ரோந்துக் காவலர்கள் மற்றும் இரவுப் பணியில் உள்ள காவல்துறையினர் விழிப்புடன் செயல்படுகின்றனரா என வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி சாதாரண உடையில் சைக்கிள் மூலம் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நள்ளிரவில் சைக்கிளில் சென்று திடீர் ஆய்வுக்கு சென்ற பெண் இணை ஆணையர்

author img

By

Published : Dec 17, 2022, 4:12 PM IST

Updated : Dec 17, 2022, 5:29 PM IST

சென்னை: சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள பூக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 8 காவல் நிலைய காவலர்கள் மற்றும் இரவு ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் வகையில், வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவு சுமார் 1½ மணி நேரம் தனது சைக்கிளில் சாதாரண உடையில் பயணித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சுமார் 9 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளைச் சைக்கிளில் பயணம் செய்த இணை ஆணையர் ரம்யா பாரதி, இரவு ரோந்து வாகன காவலர்களிடம் கலந்துரையாடி பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், பீட் குறிப்பேடுகளை ஆய்வு செய்த அவர், கண்காணிப்பு பணிகளில் ஏற்படும் பின்னடைவுகள் குறித்தும் காவலர்களிடம் கேட்டறிந்தார்.

காவல் துறையினரை விழிப்புடன் பணியாற்றச் செய்யவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் எனவும் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் திடீர் ஆய்வு; பணிக்கு வராத 4 மருத்துவர்கள் மீது நடவடிக்கை... பின்னணி என்ன?

Last Updated : Dec 17, 2022, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.