சென்னை அண்ணா நகர் 37-ஆவது தெருவைச் சேர்ந்தவர்கள் சண்முகமணி-நளினி ராணி(56) தம்பதி. இன்று (டிச.4) நளினி ராணி தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக துணிகளை அயன் செய்தார்.
அப்போது அயன்பாக்ஸ்-இல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர் மயக்கமடைந்தார். அவரது குடும்பத்தினர் நளினி ராணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு!