சென்னை: ஒரு மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு, பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை மறுநாள் (ஜூன் 13) வகுப்புகள் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி சேர்க்கை நடைபெறுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் எல்கேஜி - யுகேஜி வகுப்புகள் நடைபெறாது என்று முதலில் வெளியான தகவலால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறும் என்றும், இதற்காக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து, முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு எவ்வித சுற்றறிக்கையும் வரவில்லை. இதனால் எல்கேஜி- யுகேஜி மாணவர் சேர்க்கை நடக்குமா, நடக்காத என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு