ETV Bharat / state

முழு அடைப்பின் போது மளிகை கடைகள் திறக்கப்படுமா? - தமிழ்நாடு கரோனா செய்திகள்

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க சென்னை உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26ம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Will grocery stores open during the entire shutdown?

author img

By

Published : Apr 24, 2020, 8:57 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் மட்டும் 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 52 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்பொழுது பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் முதலிடத்தில் உள்ள சென்னையில் நோய்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக முழுஅடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேது முதல் 29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவை, அம்மா உணவகங்கள், ஏடிஎம் இயந்திரங்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் அத்தியாவசிய தேவையான அரிசி
தமிழர்களின் அத்தியாவசிய தேவையான அரிசி

கோயம்பேடு சந்தையில் உரிய விதிமுறைக்கு உட்பட்டு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மற்ற நாள்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகளுக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள் திறந்திருக்குமா அல்லது முடியிருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு நேரடியாக அறிவிக்கவில்லை. இருப்பினும் மேற்கண்ட நாள்களில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு கடைகளுக்கு ஏப்ரல் 26 முதல் 31ஆம் தேதி வரை அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் சிறிய கடைகள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மூடப்பட்டிருக்கும் என தெரியவருகிறது. உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிடவும், பார்சல் வாங்கிச் செல்லவும் அனுமதிக்கப்படாத நிலையில் வீட்டுக்கு உணவு பொருள்களை டெலிவரி செய்யும் இணையதள சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வீடுகளுக்கு மளிகை சாமான்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை.

தமிழர்களின் அத்தியாவசிய தேவையான அரிசி
மிளகாய்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா, "முழு அடைப்பில் தற்போது இயங்கி வரும் மளிகை கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. பால், காய்கறி உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மளிகை கடை வியாபாரிகளுக்கு அதிக அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முதலில் ஊடகத்துறை, காவல்துறை சேர்ந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மக்களுடன் அதிக தொடர்பில் இருப்பது நாங்கள்தான்.

பொதுவாக மளிகை கடை வியாபாரிகள் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் வியாபாரத்தை தொடரவே முயற்சி செய்வர். தற்போது நான்கு நாள்களுக்கு முற்றிலுமாக கடைகள் அடைக்கப்படுவதால் வியாபாரம் மேலும் பாதிக்கப்படும். கிருமி பாதிப்பு பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது. அப்போதுதான் பாதிப்பை குறைக்க முடியும். அரசு எங்களுடன் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளது. நாங்களே அவர்களை ஒரு வாரம் வரை மளிகைக் கடைகளை அடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். ஆனால் தமிழ்நாடு அரசு நான்கு நாள்களுக்கு மட்டுமே மூடும் படி அறிவித்துள்ளது.

டிபார்ட்மென்டல் ஸ்டோர்
டிபார்ட்மென்டல் ஸ்டோர்

பால், காய்கறி போன்ற உணவு பொருள்கள் அத்தியாவசிய பொருள்களாக இருக்கின்றன. இவற்றை முன்கூட்டியே வாங்கி சேமித்து கொள்ளலாம் என்றாலும் அனைவராலும் இது சாத்தியப்படாது. குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்கள் முன்கூட்டியே அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்துக் கொள்ள இயலாது. இந்த நிலையில், நோய் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்கவும், வியாபாரிகளை காப்பாற்றவும் தமிழ்நாடு அரசு நான்கு நாள்களுக்கு மளிகை கடைகளை மூட முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜனநாயகத்தின் 4ஆவது தூணை முடக்காதீர்கள்! கமல்ஹாசன் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.