ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி மிஸ்ஸிங்? - Dhoni Missing Chess Olympiad

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் தோனி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி மிஸ்ஸிங்?

author img

By

Published : Aug 9, 2022, 12:13 PM IST

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், இன்று 11 வது சுற்று நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் அதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘செஸ் தம்பி’ வடிவத்தினாலான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி மிஸ்ஸிங்?
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி மிஸ்ஸிங்?

அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அழைப்பிதழ், கட்-அவுட் மற்றும் பதாகைகளில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.

எனவே செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் தோனி கலந்துகொள்வாரா என்ற கேள்விஎ எழுந்துள்ளது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: 10-வது சுற்றில் இந்தியாவின் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.