சென்னை கிண்டியில் இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுசீல் சந்திரா ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வருமானவரித் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்கையில், வேலூரில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல், ரஃபேல் புத்தக வெளியீட்டுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.