சென்னை : அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது, 'தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி உறுதி செய்யப்பட்டதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ராஜவர்மன் அன்பால் என்னை சந்திக்க வந்துள்ளார். வேறு ஏதும் இல்லை. அதிமுகவை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதும் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைவார்கள்" என்றார்.
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு 'பொறுத்திருந்து பாருங்கள்' எனப் பதில் அளித்தார். இதற்கிடையே அமமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த எஸ்டிபிஐ கட்சி தேசிய துணைத் தலைவர் தெஹலான் பாகவி, டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆதார் விவரங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்க கோரும் வழக்கை மறுத்த உயர் நீதிமன்றம்!