ETV Bharat / state

என்னை இங்கே புதையுங்கள்... டாக்டர் சைமனின் கடைசி ஆசை! - கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்குமாறு டாக்டர் சைமனின் மனைவி முதலமைச்சரிடம் வேண்டுகோள்

அவர் தனது கடைசி ஆசையாக, ”நான் திரும்பி வருவேனா என்று தெரியவில்லை. ஒருவேளை நான் வரவில்லை என்றால் நமது முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறையில் எனது உடலை அடக்கம் செய்துவிடுங்கள்” என்று கூறினார்.

Wife Pleads for Decent Burial for Doctor simon Who affected Covid-19

author img

By

Published : Apr 22, 2020, 10:49 AM IST

கரோனாவால் இறந்த சென்னை மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்க விடாமல் செய்த மனிதாபிமானமற்ற செயல் இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், ஒருவேளை அவர்கள் இறந்தால் நல்ல முறையில் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

இச்சூழலில் சைமனின் மனைவி ஆனந்தி தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதலமைச்சரிடம் கண்ணீரும் கம்பளையுமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் உருக்கமாகப் பேசிய வீடியோவில், “எனது கணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, வென்ட்டிலேட்டரில் சிகிச்சை பெறுவதற்கு முன் என்னுடனும் எங்களது குழந்தைகளுடனும் வீடியோ காலில் பேசினார்.

அப்போது அவர், ”நான் திரும்பி வருவேனா என்று தெரியவில்லை. நான் வரவில்லை என்றால் நமது முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறையில் எனது உடலை அடக்கம் செய்துவிடுங்கள்” என்று கடைசி ஆசையை எங்களிடம் தெரிவித்தார்.

ஆனால் அவரது ஆசையை ஒரு சில சம்பவங்களால் நிறைவேற்ற முடியாமல் வேலங்காடு இடுகாட்டில் அவரது உடல் புதைக்கப்பட்டது. எங்களால் பூர்த்தி செய்ய முடியாத அவரது ஆசையை தமிழ்நாடு முதலமைச்சர் பூர்த்தி செய்ய வேண்டும். வேலங்காட்டில் சவப்பெட்டியில் அடைக்கப்பட்டு, புதைத்த அவரது உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணீருடன் மருத்துவர் மனைவி வேண்டுகோள்

இவ்வாறு செய்தால் வேறு யாருக்கும் கரோனா தொற்று பரவாது என்று மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோரிக்கை விடுக்கிறேன். எப்படியாவது என்னுடைய கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கண்ணீருடன் கூறி முடித்துக்கொண்டார்.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனவும், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிரடியாக அறிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: ’மக்கள் இப்படி செய்வார்கள் என கனவிலும் நினைக்கவில்லை’ - டாக்டருடைய நண்பரின் உருக்கமான வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.