ETV Bharat / state

கணவர் மீது மனைவி புகார்- சொத்து பிரச்னையா? போலீஸ் விசாரணை - சொத்து விவகாரம்

சென்னையில் சொத்துக்காக தனது கணவர், தன் மீது பொய்யான குற்றச்சாட்டை வைப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த காவலர் பெஞ்சமினுடன் ரூபாவதி

author img

By

Published : Jul 18, 2021, 9:56 AM IST

சென்னை: மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால் பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் கொரியர் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவர் 20 ஆண்டுக்கு முன் ரூபாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 19 வயதில் மகன் உள்ளார்.

கணவர் மீது புகார்

இந்நிலையில், ஜூலை 16ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்ற ஜெயபிரகாஷ், தனது மனைவி முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்கிளின் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வைத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு தன்னை மிரட்டி வருவதாகவும் புகார் அளித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த காவலர் பெஞ்சமினுடன் ரூபாவதி

இதனைத் தொடரந்து, ஜெயபிரகாஷின் மனைவி ரூபாவதி நேற்று (ஜூலை 17) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கணவர் மீது ஒரு பரபரப்பு புகார் அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரூபாவதி, “எனது பெயரில் ஒரு கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கிறது. இந்த சொத்துக்களை அபகரிப்பதற்காகவே எனது கணவர் ஜெயபிரகாஷ் இதுபோன்ற அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார்.

அடித்து துன்புறுத்திய கணவர்

பெஞ்சமின் பிராங்கிளின் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் இருந்த உறவு ஐந்து வருடத்திற்கு முன்பு முடிந்துபோன விஷயம். எனது கணவர் ஜெயபிரகாஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், தொடர்ந்து தன்னை வீட்டில் அடித்துத் துன்புறுத்தி வருகிறார். இதன் காரணமாகவே நான் நீதிமன்றத்தில் மூன்று மாதத்திற்கு முன்பே விவாகரத்து கேட்டு வழக்குப்பதிவு செய்தேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், “காவலர் பெஞ்சமின் என்னுடன் எடுத்த ஆபாச படங்களை வைத்து மிரட்டவில்லை. அப்படியென்றால் நான் தானே புகார் அளிக்க வேண்டும்” என்றார். பின்னர் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே சென்ற ரூபாவதி, இருசக்கர வாகனத்தில் தயாராக காத்திருந்த காவலர் பெஞ்சமினுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து ஒன்றாக சென்றார்.

இதையும் படிங்க: ஆபாசக் காணொலிகளை வெளியிடபோவதாக மிரட்டும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.