சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமான கான்ட்ராக்டர் தயாளன் (48). இவருடைய மனைவி கார்த்திகா(42). இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கடந்த 17 வருடங்களாக குழந்தையில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு கார்த்திகாவின் சகோதரர் கதிரவன், கார்த்திகாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டுள்ளார். அப்போது அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த அவர் நேரடியாக வீட்டிற்க்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, கதவு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கார்த்திகா மின்விசிரியில் தூக்கியில் தொங்கியபடி சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த சங்கர்நகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அறையில் கார்த்திகா கைப்பட எழுதிய கடித்தத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அதில், ”தனது கணவர் தயாளன் தன்னை மிகவும் துன்புறுத்தி வந்ததாகவும் தன்னுடைய தற்கொலைக்கு கணவன் தயாளன் மற்றும் அவருடன் தொடர்ப்பில் இருக்கும் ஸ்ரீமயுரி என்ற பெண் தான் காரணம்” என்று எழுதபட்டிருந்தது. இதனையடுத்து தயாளனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கையை பெண்கேட்டு தகராறு.. அண்ணனை வெட்டிக் கொன்ற இளைஞர்!