ETV Bharat / state

குடும்பத் தகராறு: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை! - குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை

சென்னை: தாம்பரம் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Wife commits suicide by hanging due to family dispute!

author img

By

Published : Sep 29, 2020, 5:45 AM IST

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ரஹ்மத்துல்லா - கார்த்திகா. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்த ரஹ்மத்துல்லா, கரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திகா, கடந்த ஒருமாத காலமாக தாம்பரத்திலுள்ள ஸ்கேன் சென்டரில் வேலை செய்துவந்துள்ளார். இதனால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (செப். 27) இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. பின்னர் ரஹ்மத்துல்லா வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகா, வீட்டினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரஹ்மத்துல்லா, வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்காமல் இருந்துள்ளது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் கார்த்திகாவை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கஞ்சா விற்பனை மோதல் - ஒருவருக்கு வெட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.