ETV Bharat / state

ரூ.39 ஆயிரம் கோடி மறைமுக கடன் வாங்கப்பட்டது ஏன்? பிடிஆர் கேள்வி

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டின் கடன் சுமை கணக்கு வழக்குகள் சரியாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறிய பிடிஆர் தியாகராஜன், மறைமுக கடன் 39,071கோடி எதற்காக வாங்கப்பட்டது என்ற குறிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

PTR
PTR
author img

By

Published : Aug 9, 2021, 9:52 PM IST

சென்னை : தமிழ்நாட்டின் நிதிநிலை மிக மோசமாக உள்ளதாக தொடர்ந்து அவர் கூறி வந்த நிலையில், அது தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று (ஆக.9) நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். சுமார் 126 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கடந்த பத்து ஆண்டு கால தமி்ழ்நாடு நிதி நிலைமை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளை அறிக்கை
இயல்பாகவே திமுகவின் தத்துவம் மற்றும் அதன் குணாதிசயத்தை தெரிவிக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் கூறினார். அரசு நிர்வாகத்தில் எப்போதும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது என்ற அவர், இதன் மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், 2006-2011 வரை திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது, ஆனால் அதன் பின்னர் நிதி நிலைமை சீரழிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழ்நாட்டின் கடன் 4.75 லட்சம் கோடியாக உயர்ந்தது என்றார். கடன் வாங்கித்தான் ஆட்சியையே நடத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் அதிமுக ஆட்சி இருந்ததாக குற்றஞ் சாட்டினார்.

மறைமுக கடன் உயர்வு
தமிழ்நாட்டின் கடைசி ஐந்து ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி என்றும், தலா ஒரு குடும்பத்தின் கடன் மட்டும் தற்போது 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் என்றும் அவர் கூறினார். 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ் நாட்டின் கடன் சுமை 1.14 லட்சம் கோடி, ஆனால் 2016 இல் அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் 2.28 லட்சம் கோடி எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மறைமுக கடனாக ரூ.39,072 கோடி எதற்காக வாங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கடன் சுமை தொடர்பான கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக அரசின் கடன் உத்தரவாதத்தில் 90 சதவீதம் மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது, அதேநேரத்தில் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி 30 சதவீதம் குறைந்துள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் வரி செலுத்த வேண்டியவர்களிடமிருந்து வரியை பெறாமல் இருந்துள்ளனர். இது முற்றிலும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், குறிப்பாக வரி வசூலிக்கும் முறையை பணக்காரர்களுக்கு பயன் தரும் வகையிலும், ஏழைகளுக்கு எதிராகவும் உள்ளது என்றார்.

தமிழ்நாடு அரசு இதுவரை பெற்றுள்ள கடனுக்கு செலுத்தும் ஒரு நாள் வட்டி மட்டும், 87.31 கோடி என தெரிவித்தார். அதேநேரத்தில் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை 20,033 கோடி என தெரிவித்தார். மின்சாரவாரியம், போக்குவரத்து கழகத்தில் மட்டும் 2 லட்சம் கோடி கடன் உள்ளது. வரி வசூல் என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும், அதேநேரத்தில் சமூகநீதிக்கும் அது வழிவகை செய்ய வேண்டும் என்றார். உடனடியாக போக்குவரத்து துறையை சீரமைக்க வேண்டிய நெருக்கடி உள்ளது எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : திமுக வெள்ளை அறிக்கை, சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்- முன்னாள் நிதியமைச்சர் ஒபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.