ETV Bharat / state

பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவிற்கு ஓபிஎஸ்ஸை அழைக்காதது ஏன்?: அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் - Minister I Periyasamy

தமிழ்நாட்டில் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா நடந்திருந்தால் ஓபிஎஸ்ஸை அழைத்திருப்போம் என அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பென்னிகுவிக் சிலை திறப்பு விழாவிற்கு ஓபிஎஸ்சை அழைக்காதது ஏன்? அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

author img

By

Published : Sep 12, 2022, 3:51 PM IST

சென்னை: மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களும் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த பொறியாளர் பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு பேருதவியாக இருந்த அணையைக் கட்டிய பொறியாளர் பென்னிகுயிக் பிறந்த பிரிட்டனின் கேம்பர்ளி நகரில், பென்னிகுயிக் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணையைக்கட்டிய பொறியாளர் கர்னல் பென்னிகுயிக் சிலை, அவரது சொந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திறந்து வைப்பதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 6ஆம் தேதி லண்டன் சென்றார்.

இதனிடையே இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்ததால் சிலை திறப்பு விழா நடக்கவில்லை. எனவே அமைச்சர் உட்பட பலரும் லண்டனில் இருந்து சென்னை திரும்பினர்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு நினைவுச்சின்னமாக அவர் பிறந்த ஊரில் சிலை அமைக்க சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். ஐந்து மாவட்ட விவசாயித்திற்கும், குடிக்கவும் தண்னீர் வழங்கவும் நடவடிக்கை எடுத்து சிறந்த அணையை உருவாக்கினார்கள்.

சொந்த ஊரில் அவரது பெருமையைப் பறைசாற்றும் வகையில் சிலை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். லண்டன் கேம்பர்ளி நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து ராணி இறந்துவிட்டதால், திறப்பு விழா என்பது இனி இல்லாமல், மக்கள் பார்த்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் விழா என்றால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு தரப்படும். லண்டனில் விழா என்பதால், அவர்களது சொந்த செலவில் வந்தார்கள். தங்க.தமிழ்செல்வனும் அவரது சொந்த செலவில்தான் வந்தார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா? - பேரவையில் விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.