ETV Bharat / state

சென்னை மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்: 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் எனவும் கேள்வி! - Chennai High Court

பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் கல்வித்துறை துணை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லாவிட்டால் சென்னை மாநகராட்சி ஆணையரும், கல்வித்துறை துணை ஆணையரும் நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்களுக்கு நீதிமன்றம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 20, 2023, 5:00 PM IST

உயர்நீதிமன்றம், சென்னை: சென்னை புளியந்தோப்பு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர், செல்வகுமார். இவர், தனக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த 2018ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் செல்வகுமார் கடந்த 2019ஆம் ஆண்டு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விளக்கமளித்த மாநகராட்சி நிர்வாகம், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் மனுதாரர் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், பட்டியலில் இருந்த 22 பேருக்கு, அதே ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 2013ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகியுள்ளன என மாநகராட்சி நிர்வாகத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மாநகராட்சி நிர்வாகம், 400 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பணியிடம் கூட இதுவரை நிரப்பப்படவில்லை எனவும் விளக்கம் அளித்தது.

இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் 400 காலியிடங்களை நிரப்பாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: NEET UG 2023 Counselling: MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவக்கம்!

பின்னர், சென்னை மாநகராட்சி சார்பில் எத்தனை பள்ளிகள் நடத்தப்படுகின்றன?அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? அதில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளனவா? அந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை காலியாக உள்ளன? கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு வரும் ஜூலை 26ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், கல்வித்துறை துணை ஆணையருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சென்னை மாநகராட்சி ஆணையரும், கல்வித்துறை துணை ஆணையரும் நேரில் ஆஜராக வேண்டியது வரும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: சம வேலை சம ஊதியம் - மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் இடைநிலை ஆசிரியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.