ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி.... பிள்ளையார் சிலையை ஏன் உடைத்தார் பெரியார்? - ganesh chadurthi

வரலாறு ரீதியாக விநாயகர் சிலையும், பூகோள ரீதியாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் விமர்சனத்திற்குட்பட்டே இருக்கின்றன.

periyar
periyar
author img

By

Published : Sep 10, 2021, 5:08 PM IST

நாடு முழுவதும் இன்று (செப் 10) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கரோனா காரணமாக தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பொதுவாகவே விநாயகர் சதுர்த்தி இந்திய அளவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை.

அதேசமயம், விநாயகர் என்ற கடவுளே பௌத்தத்தை எதிர்ப்பதற்கும், அழிப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் பெரும்பாலும் விநாயகரே பயன்படுத்தப்படுவதாக கருத்துக்கள் நிலவி வருகின்றன.

1894ஆம் ஆண்டு பள்ளி வாசலின் முன்னால் விநாயகர் சதுர்த்தியின்போது, இந்துக்கள் இசைக்கருவிகள் இசைப்பதை பாலகங்காதர திலகர் தீவிரமாக ஆதரித்தார் என்பன போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதேபோல், விநாயகர் சிலையை கடலிலோ, ஆற்றிலோ கரைப்பதன் மூலம் நீர்நிலைகள் மாசடைகின்றன. நீரில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி பிரமாண்டமான விநாயகர் சிலைகளை செய்ய பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வினைல் அக்ரலிக் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் ஆஸ்துமா, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உருவாக காரணமாக அமைகின்றன. வரலாறு ரீதியாக விநாயகர் சிலையும், பூகோள ரீதியாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் விமர்சனத்திற்குட்பட்டே இருக்கின்றன.

விநாயகர் சிலை உடைப்பு
விநாயகர் சிலை உடைப்பு

குறிப்பாக, கடவுள் எதிர்ப்பு புள்ளியில் நின்ற பெரியார், விநாயகர் சிலை மூட நம்பிக்கைகளுக்குள் மக்களை எளிதாக இழுக்கிறது என்பதையும், ஒரு மதத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது எப்படி கடவுளாகும் என்பதையும் ஆழமாக நம்பிய அவர் 1953ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா (புத்தர் பிறந்தநாள்) அன்று விநாயகர் சிலையை போட்டுடைத்தார். அதிலும், தனது சொந்த பணத்தில் விநாயகர் சிலையை வாங்கி அதனை உடைத்தார்.

இப்படி விநாயகர் சிலை உடைப்புக்கு பல காரணங்கள் இருக்கும்போது பெரியார் இந்து மத கடவுளை வேண்டுமென்றே அவமானப்படுத்தினார் என்ற கருத்து பரப்பப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்துவது தற்போதைய தேவை என பெரியாரியவாதிகள் வலியுறுத்துகின்றனர். எது எப்படியோ, வீட்டுக்கோ, நாட்டுக்கோ, உயிருக்கோ கேடு விளைவிக்காத எதுவாக இருந்தாலும் அதை மட்டுமே மக்கள் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே யதார்த்தம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.