ETV Bharat / state

2டிஜி, ஆனந்தய்யா கண்டுபிடித்த கரோனா மருந்துகள் குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

2 டி ஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

author img

By

Published : Jun 25, 2021, 1:53 PM IST

சென்னை: கரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் 2டிஜி எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள நிலையில், அதை சந்தைக்கு கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், ஒரு ஆய்வகத்துக்கு மட்டுமே இந்த மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்னதாக விசாரணைக்கு வந்தபோது மனு குறித்து இன்று (ஜூன்.25) ஒன்றிய அரசு விளக்கமளிக்கும்படி கோரியிருந்தனர்.

2டிஜி மருந்து குறித்து விளக்கம்

இந்நிலையில் இன்று நடைபெற்ற மனு மீதான விசாரணையின்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களைக் கேட்டதாகவும், அதற்கு 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்வதற்காக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2டிஜி
2டிஜி

இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, விரைவில் இது குறித்த விவரங்களை வழங்குவதாக ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 2 டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் இரண்டு நாள்களில் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்து

இதையடுத்து ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அழைத்து பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக இந்த மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கவலை தெரிவித்த நீதிபதிகள், அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.

ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு செய்து வருவதாகவும் ஒன்றிய அரசு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

இதையடுத்து 2 டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்து தெரிவிக்குமாறும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ’டெல்டா பிளஸ் வைரஸைத் தடுக்க ஏன் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளவில்லை...’ - ராகுல் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.