ETV Bharat / state

கர்நாடகாவில் எடுபடாத அண்ணாமலையின் வியூகம்.. காரணம் என்ன..?

கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்து பாஜக ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பிரதிபலிக்காதது குறித்தும், அவை இனி வரும் மக்களவைத் தேர்தலில் எவ்வாறு பிரதிபலிக்க உள்ளது என்பது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அண்ணாமலையின் வியூகத்தில் பிரதிபலிக்காத கர்நாடகா.. எதிர்வினையாகுமா மக்களவை தேர்தல்?

author img

By

Published : May 14, 2023, 6:52 AM IST

சென்னை: பரபரப்பாக நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும் மற்றும் மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி அடைந்துள்ளனர்.

இதில், பாஜக ஆட்சியை இழந்து எதிர்கட்சியாக மாறியுள்ளது. இதனிடையே, கர்நாடகா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி - அமித் ஷா வியூகங்கள் எடுபடாததற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், அங்கு இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலையின் வியூகமும் எடுபடாததற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குறிப்பாக, கர்நாடகா தேர்தலில் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் மற்றும் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக தமிழ்நாட்டின் அரசியலில் நடைபயணம் மேற்கொள்ள இருந்த அண்ணாமலைக்கு கர்நாடகா தேர்தலில் இணை பொறுப்பாளாராக நியமனம் செய்யப்பட்டதால், அந்த நடைபயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

அண்ணாமலையின் வியூகம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலை 9 ஆண்டுகள் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். இதனையடுத்து தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராகி ஒன்றரை ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியாற்றிய கர்நாடகாவில் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

தேர்தல் களத்தில் தன்னுடைய வெற்றியை பதிவு செய்யாத அண்ணாமலை, கர்நாடகா தேர்தலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ள நினைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை தொடங்கியதால் கூட்டணி கட்சி மற்றும் சொந்த கட்சியினர் மத்தியில் அண்ணாமலைக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, திமுகவினருடைய சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலைக்கு திமுகவை கடந்து அதிமுக மற்றும் சொந்த கட்சியினரே ஒரு சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என பேசப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

இதன் மூலம் மேலிடத்தில் அண்ணாமலைக்கு எதிர்ப்பு இல்லை என வெளிக் காட்டப்பட்டது. இந்த நிலையில்தான் கர்நாடகாவில் பிரச்சாரத்தின் மூலம் தனது திறமையை நிரூபிப்பதற்காக அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது.

இவை அனைத்தும் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும். குறிப்பாக, உடுப்பி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 5 வெற்றியும், தாவணகெரேவில் உள்ள 7 தொகுதிகளில் 1, ஷிவமொகாவில் உள்ள 7 தொகுதிகளில் 3, ஹாசனில் உள்ள 7 தொகுதிகளில் 2, தட்சிண கன்னடாவில் உள்ள 8 தொகுதிகளில் 6, உத்தர கன்னடாவில் உள்ள 6 தொகுதிகளில் 1 மற்றும் பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில் 15இல் வெற்றி அடைந்துள்ளது.

அதேநேரத்தில், சிக்மகளூருவில் உள்ள 5 தொகுதிகள், கோலாரில் உள்ள 6 தொகுதிகள், மாண்டியாவில் 7 தொகுதிகள் ஆகியவற்றில் ஒரு தொகுதியைக் கூட பாஜக கைப்பற்றவில்லை. இவ்வாறு அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட 86 தொகுதிகளில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளதால், அண்ணாமலையின் தலைமைத்துவம் கேள்விக்குள்ளாக்கி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

கர்நாடகாவை பொறுத்தவரை பாஜக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஒப்பந்தத்திற்கு அதிகளவில் கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றாதது, ராகுல்காந்தியின் மீதான நடவடிக்கை போன்றவை பாஜக தோல்விக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரின் செயல்பாடு காரணமாகவும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் பாஜக மீண்டும் இருந்திருந்தால்? கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருந்தால் அண்ணாமலையின் செல்வாக்கு மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம், அந்த வெற்றி தமிழ்நாடு அரசியலில் வேகமாக பயணம் செய்ய வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், இவை அனைத்தும் கர்நாடகா தேர்தல் தோல்வி காரணமாக கானல் நீராக மாறி உள்ளதாகவே தெரிகிறது.

அதேபோல், கர்நாடகா தேர்தலை காரணம் காட்டி அதிமுக கூட்டணியில் அதிக இடம் பெற்று விடலாம் என்ற அண்ணாமலையின் கணக்கும் பொய்த்துப் போனதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், இது குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "கர்நாடகாவின் தோல்விக்கு அண்ணாமலை பொறுப்பேற்க வேண்டும். அதிமுக ஆதரவு கொடுத்த புலிகேசி நகர் தொகுதியில் காங்கிரஸ் பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளது.

அண்ணாமலையின் பிரமாண்டமான பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை. நாம் நினைப்பதுதான் சரி என்று ஒரு அரசியல்வாதி நினைத்தால், அப்போதே சரிவு தொடங்கி விடுகிறது. அண்ணாமலை அதிரடியாக பேசுவதால் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் போய் சேர்ந்துள்ளார். ஆனால், அண்ணாமலை அரசியலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. இன்னும் அண்ணாமலைக்கு அனுபவம் தேவை" என கூறினார்.

இதையும் படிங்க: இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் ComeBack கொடுத்த தொகுதி! எது தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.