அதிமுகவைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் இடையே எதிர்க்கட்சி தலைவராக கடும் போட்டி நிலவி வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மே.7) மாலை கூடியது. இதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது வெளியே கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

பின்னர் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுப்பறி நிலவியது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சிக்கு ஒரே தலைமை வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்த கூட்டம் மீண்டும் மே 10ஆம் தேதி நடைபெறும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வாக்குவாதம்?