சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ், அறிவிக்கப்பட்ட திட்டங்களில் அதில், எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; அதில் எத்தனை திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன என்ற 420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பேரவையில் இன்று (மார்ச் 23) வழங்கப்பட்டது.
இதில் 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ், அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் மேஜைகளிலும் வைக்கப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது,
1. அரசாணை வெளியிடப்படாத அறிவிப்புகள் - 20
அதன் மதிப்பீடு - ரூ.9,740.73 கோடி
2. கைவிடப்பட்ட அறிவிப்புகள் - 26
அதன் மதிப்பீடு - ரூ.5,469.78 கோடி
3. நிதி விடுவிக்கப்படாமல் பணி தொடங்கப்படாமல் உள்ள அறிவிப்புகள் - 143
அதன் மதிப்பீடு - ரூ.76,618.58 கோடி
4. பணிகள் நடைபெற்று வரும் அறிவிப்புகள் - 348
அதன் மதிப்பீடு - ரூ. 1,47,922.88 கோடி; செலவினம் - ரூ.41,844 கோடி
5. நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள் - 1167
இதன் மதிப்பீடு - ரூ. 87,405 கோடி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் - சென்னை மாநகர மேயர்