ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோயில்கள் மூடப்பட்டுள்ளன? உயர் நீதிமன்றம் கேள்வி! - சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் எத்தனை கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன, எத்தனை கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்ற விவரத்தை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் கேள்வி
உயர்நீதிமன்றம் கேள்வி
author img

By

Published : Jul 18, 2020, 6:26 AM IST

தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோயில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன? என்ற விவரத்தை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பத்திரிகையின் திருச்சி மற்றும் வேலூர் பதிப்பக வெளியீட்டாளர் கோபால்ஜி தாக்கல் செய்துள்ள மனுவில், "கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கோயில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள்,
ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோர் வருமானம் இழந்து, பெரும் சிரமத்தில் உள்ளனர்.

கோயில்கள் மூடப்பட்டாலும், அன்றாட பூஜைகளை நடத்துவதற்காக, இவர்கள் அனைவரும் தினமும் கோயிலுக்கு வந்து வழக்கம்போல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் கிடையாது. கோயிலுக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 35 விழுக்காட்டை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஊதியமாகவும், 35 விழுக்காட்டை கோயில் பராமரிப்புக்காகவும் செலவிடப்படுகிறது. மீதமுள்ள 30 விழுக்காடு கோயில்களின் உபரி நிதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையிடம் தற்போது 30 விழுக்காடு உபரி நிதியாக சுமார் ரூ.300 கோடி உள்ளது. எனவே, அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று (17.07.2020) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், பல முரண்பாடுகள் உள்ளன என்று வாதிட்டார்.

இந்து அறநிலையத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கோயில் பணியில் ஈடுபட்ட பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது. மற்றவர்கள் ரேஷன் கடை மூலம் அரசு வழங்கும் உதவித் தொகையை பெற்று உள்ளார்கள். ஆனால், தனியாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வழக்கறிஞர், "கிராமத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்றவை மூடப்பட்டுள்ளன" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோயில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோயில் திறக்கப்பட்டுள்ளன? அதில் பூசாரிகள்
எத்தனை பேர்? மற்ற ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்ற விரிவான அறிக்கை இந்து சமய அறநிலைத்துறை வருகிற 22ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக தனியார் பள்ளிகள் பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.