ETV Bharat / state

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் எப்போது? நீதிமன்றம் கேள்வி - சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் எப்போது

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என விளக்கமளிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 sivaganaga district panchayat leader election

author img

By

Published : Oct 28, 2020, 4:29 PM IST

சென்னை: கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்திற்கு 16 வார்டு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த உறுப்பினர்களைக் கொண்டு தலைவர், துணைத் தலைவர் தேர்வுசெய்யப்படுவர். ஆனால் போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, செந்தில் குமார் உள்பட எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி, மாவட்ட பஞ்சாயத்துக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தக் கோரி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றஞ்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் நெடுஞ்செழியன், இது சம்பந்தமாக மாநில அரசை கலந்தாலோசித்து தெரிவிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கைவைத்தார்.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதால் தமிழ்நாடு அரசுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய நீதிபதி, சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என நவம்பர் 10ஆம் தேதி விளக்கமளிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'முதலில் அறிவிக்கப்பட்டவரே வெற்றியாளர்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.