தமிழ் புத்தாண்டு தற்போது சித்திரை 1ம் தேதியாக இருக்கும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்தாண்டு தை 1ம் தேதிக்குத் தமிழ் புத்தாண்டை மாற்றப்போவதாகப் பல தகவல்கள் வெளிவந்தன. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்தாண்டு பொங்கல் அன்று அவரது சமூக வலைதளத்தில் பொங்கல் வாழ்த்துடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழக அரசின் 2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் தமிழ் புத்தாண்டு தினம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அரசின் விடுமுறை அறிவிப்பில் ஜனவரி 15 பொங்கல் என்றும், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு என்றும் வெளியாகி உள்ளது.
தமிழ் புத்தாண்டு தினம் குறித்த மாறுபட்ட கருத்துகளும், எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது சித்திரை 1ம் நாளான ஏப்ரல் 14ம் தேதியைத் தமிழ் புத்தாண்டு என அரசு அறிவிப்பில் அறிவித்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
-
உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!#Covid19 பரவும் இச்சூழலில் பொங்கலன்று நேரில் வந்து சந்திப்பதைக் கட்டாயம் தவிருங்கள்.https://t.co/bJKXtOGghg#LetterToBrethren pic.twitter.com/sTjVF9a5Qa
— M.K.Stalin (@mkstalin) January 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!#Covid19 பரவும் இச்சூழலில் பொங்கலன்று நேரில் வந்து சந்திப்பதைக் கட்டாயம் தவிருங்கள்.https://t.co/bJKXtOGghg#LetterToBrethren pic.twitter.com/sTjVF9a5Qa
— M.K.Stalin (@mkstalin) January 12, 2022உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!#Covid19 பரவும் இச்சூழலில் பொங்கலன்று நேரில் வந்து சந்திப்பதைக் கட்டாயம் தவிருங்கள்.https://t.co/bJKXtOGghg#LetterToBrethren pic.twitter.com/sTjVF9a5Qa
— M.K.Stalin (@mkstalin) January 12, 2022
இதையும் படிங்க: ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் அரசு விடுமுறைகள்... 2023ஆம் ஆண்டில் எத்தனை அரசு விடுமுறை தினங்கள் தெரியுமா..?