ETV Bharat / state

இரட்டை சதம் அடித்த தக்காளி!... விலை குறையாததற்கு காரணம் என்ன? - சென்னை செய்திகள்

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை ரூ.200-யை கடந்து விற்பனை செய்யபடுகிறது. தக்காளி விலை குறைப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் தக்காளி விலை குறையாதற்கு காரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

tomato price did not drop
இரட்டை சதம் அடித்த தக்காளி
author img

By

Published : Jul 31, 2023, 2:29 PM IST

சென்னை: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளிக்கு பெரும் தேவை இருப்பதால், தக்காளியின் விலை தினம் தினம் உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கிலோ ரு.20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 200 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் சுமார் 470 லோடு காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. அதில், முக்கியமாகக் கொண்டுவரப்படுவது தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவை தான்.

இதில், தக்காளி மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 1050 டன் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் நிலையில், தற்போது வெறும் 400 டன் தக்காளி மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. இதனால், தக்காளி விலை சில்லறை விற்பனையில் பங்குச் சந்தை நிலவரம் போல் தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் முதல் ரகம் தக்காளி 150 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் தக்காளி 140 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் தக்காளி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தக்காளியின் விலை இன்று (ஜூலை.31) மொத்த விலையில் கிலோ ரூ.190 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியின் தலைமை நிர்வாகி அலுவலர் சாந்தி கூறியாதவது, "சென்னைக்கு தக்காளி என்பது, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் கொண்டுவரப்படும்.

கோவை, உடுமலைப்பேட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் விளையும் தக்காளி அங்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொடுத்து விடுவார்கள். தற்போது தக்காளியின் தேவை நாடு முழுவதும் இருக்கிறது. இதனால் ஆந்திரா மட்டும் கர்நாடகத்தில் தான் இந்தியாவில் பெரும்பாலுமான வியாபாரிகள் தக்காளி கொள்முதல் செய்கிறார்கள். தக்காளியின் வரத்து குறைந்து இருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் தக்காளி தேவை இருக்கிறது.

அதனால் தற்போது தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதேப்போல் இன்று(ஜூலை.31) காலை கோயம்பேடு சந்தைக்கு 27 லாரிகள் மட்டுமே வந்தது. தக்காளியின் டிமாண்ட் அதிகமாக இருந்தாலும், நம் வியாபாரிகள் சிரமப்பட்டு தான் தக்காளியை சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வருகிறார்கள்" என தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் சு.பழனிசாமி கூறியதாவது, "தக்காளியின் விலை ஏற்றத்திற்கு காரணம் வட மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் ஆந்திரா, கர்நாடக ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் தற்போது தக்காளியின் விலை உச்சத்தை தொடுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் தக்காளி நடுவு காலம் என்பது மார்ச் முதல் ஜூன் வரை. ஆனால், இந்த வருடம் தக்காளி பயிரில் பூ சரிவர நிற்கவில்லை.

இதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம். மேலும் தக்காளியின் பயிர் பருவம் தாண்டி பெய்த மழையும் இன்னொறு காரணம் ஆகும். மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதில் கோபமடைந்து சில விவசாயிகள் தக்காளியை நடுவு செய்யவில்லை. அதனால் தக்காளி உற்பத்தி தமிழ்நாட்டில் குறைந்துள்ளது" என தெரிவித்தார்.

மேலும், கோயம்பேடு காய் கனி மொத்த வியாபர சங்கத்தின் பொருளாளர் சுகுமார் கூறியதாவது, "தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும்போது கோயம்பேடு சந்தைக்கு 60 முதல் 80 வண்டிகளில் 800 டன் முதல் 1000 டன் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது விளைச்சல் குறைவு என்பதால் 300 டன்னில் இருந்து 450 டன் வரை மட்டுமே வருகின்றன.

இதனால் தக்காளின் விலை அதிகரித்தது. அதேபோல் இன்று காலை வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சற்று குறைந்துள்ளது. நாட்டு தக்காளி மற்றும் நவீன் தக்காளி ஆகிய ரக தக்காளி வரத்து மிகவும் குறைந்து இன்று (ஜூலை.31) 25 முதல் 27 லாரிகள் மட்டுமே வந்தது. இதனால் தக்காளி விலை கடந்த நாட்களை விட இன்று அதிகமாகி உள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.210 கடந்து விற்பனை செய்து வருகிறது.

மலிவு விலையில் தக்காளியை மக்களுக்கு வழங்குவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே, 300 நியாய விலை கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், 100க்கும் மேற்பட்ட பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை கடுமையாக அதிகரித்து உள்ளது. தக்காளி விலை அதிகரிக்கும் போது ஒரு சில நாட்கள் விலை உச்சத்தில் இருப்பது வழக்கம். ஆனால், இந்த முறை ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் தக்காளி விலை குறையவில்லை. தக்காளி விலை எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது" - வைகோ சபதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.