ETV Bharat / state

தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா?... அதிமுகவின் அடுத்த 'மூவ்' என்ன!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, நாளை மறுநாள்(ஜூலை 5) அதிமுகவின் தொண்டர்களைச் சந்திப்பேன் என்று கூறியுள்ள விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author img

By

Published : Jul 3, 2021, 8:45 PM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை நிறைவு செய்த சசிகலா, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார்.

அதன் பின்னர், தமிழ்நாட்டு அரசியல் நகர்வுகளை தீவிரமாகக் கவனித்து வந்தார். சசிகலா வருகை அதிமுகவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். இதன் காரணமாக, எந்தவித சலசலப்பும் இன்றி, சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக எதிர்கொண்டது.

உட்கட்சி குழப்பம் காரணமாக, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று எண்ணிய அதிமுகவின் கனவு தவிடுபொடியானது.

EPS OPS

இருப்பினும், 66 இடங்களை கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே ஒருமித்தப் போக்கு இல்லாததால், இருவரும் தனித்து செயல்படும் சூழல் உருவானது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்புவரை இருவரும் கூட்டாக அறிவிப்பு, அறிக்கைகள் வெளியிட்டு வந்த நிலையில், இருவரும் தங்களை முன்னிலைப்படுத்தும் அதிகாரப் போட்டியில் தற்போது தனித்தனியே அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.

தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே நடக்கும் ’நீயா நானா’ போட்டியை சரியாகக் கணித்து வரும் சசிகலா, அவற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

அதிமுகவில் நிலவிவரும் குழப்பமான சூழலை தன்வசமாக்கி, அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார் என்றே அரசியல் பட்சிகள் தெரிவிக்கின்றன.

sasikala

ஆடியோ அரசியல் பலிக்கும்?

தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்த சசிகலா , மே 29 முதல் அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை அரசியலில் ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த சில வாரங்களாக, அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசிவரும் ஆடியோ வெளியாகி வந்தன. இதுவரை 120க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் சசிகலா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டன.

தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரிடமும் கட்சியை, தான் மட்டுமே கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்ல முடியும் என்பதைத் தொடர்ந்து கூறிவருகிறார்.

எம்ஜிஆர்

ஓரிரு நாள்களுக்கு முன்னர் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், தான் எம்ஜிஆருக்கு ஆலோசனை கூறியுள்ளேன் என்று தெரிவித்து, எம்ஜிஆர் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டுவரும் முயற்சியை செய்துவருகிறார்.

அதிரடி நீக்கம்

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள், எம்பிக்கள் என முப்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கி, ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருவரும் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதிமுக தலைமையின் இந்த நடவடிக்கைக்குப் பிறகும் தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசுகிறார். இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,'அதிமுகவில் இருந்து கடந்த 2017ஆம் ஆண்டே சசிகலா நீக்கப்பட்டுவிட்டார். அவர் ஆயிரம் பேருடன்கூட பேசட்டும், அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம் என ஆணித்தரமாகக் கூறிவருகிறார்.

இதற்கிடையே, ஓரிரு நாள்களுக்கு முன்னர் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் இல்லாமல், இபிஎஸ் தலைமையில் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இதில் ஜூலை 5ஆம் தேதிக்குப் பின்னர் தொண்டர்களைச் சசிகலா சந்திப்பதாக அறிவித்து ஆடியோ வெளியான விவகாரம், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து சசிகலாவுடன் பேசுவது, சந்திக்கும் விவகாரம், கட்சி உத்தரவை மீறி சந்தித்தாலும், பேசினாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவின் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது குறித்தும், ஒற்றை தலைமையின் கீழ் கட்சியைக் கொண்டு வருவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

eps

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸிற்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், அவருக்கு அதிமுக அவைத்தலைவர் பொறுப்பு வழங்கி, அதிமுகவை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைப்பது குறித்தும், இதற்கான ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையிலும் இபிஎஸ் ஈடுபட்டுள்ளதாக அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

அடுத்த நகர்வு என்ன

அதிமுகவின் தற்போதைய தலைமைகள் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் சசிகலா, ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகளைப் பொறுத்து தொண்டர்களைச் சந்திப்பது குறித்து விரைவில் அறிவிக்கவிருக்கிறார்.

மேலும் சுற்றுப் பயணத்தின்போது ஆதரவாளர்களிடையே பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சசிகலாவின் தொடர் நகர்வால், எம்மாதிரியான நடவடிக்கையை அவர் எடுப்பார் என்று தெரியாமல் அதிமுக தலைவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்கனவே உட்கட்சி பூசலால் தவித்துவரும் அதிமுகவின் இரட்டை தலைமைக்கு, சசிகலாவின் அரசியல் வருகை ஒருவித பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சசியின் அரசியல் நகர்வு, பேச்சு குறித்து அதிமுகவின் மேல்மட்ட தலைவர்கள் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

அதிமுகவைப் பாதிக்காது

இதுகுறித்து பதிலளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி, சசிகலா வெளியிடும் ஆடியோ எந்த வகையிலும் அதிமுகவை பாதிக்காது. ஆலோசனை கூட்டத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், வரும் உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டன. ஆனால், ஊடகங்கள்தான் இதைப் பெரிதுப்படுத்திவருகின்றன என்றார்.

கட்சியைக் கைப்பற்ற முயற்சி

இதுதொடர்பாக மக்களவை முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறுகையில், சசிகலாவுக்கு 2 சதவீத வாக்கு வங்கி மட்டுமே இருக்கிறது. எப்படியாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் ஆணைய விதிப்படி பொதுக்குழு விரைவில் கூட்டப்பட வேண்டும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்பும், வேண்டுகோளும் என்றார்.

சசிகலா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அதிமுகவில் எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:‘ஊரடங்கு முடிந்ததும் தொண்டர்களைச் சந்திப்பேன்’- சசிகலா ஆடியோ வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.