சென்னை: அதிமுக - பாஜக கூட்டனி முறிவு என்பது தற்போது வரை பல சர்ச்சைக்குள்ளாக்கபட்ட கருத்துகளே பரவலாக பரவி வருகிறது. சர்ச்சைக்களுக் எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஒரே கருத்தை பதிவிட்டு வருகிறார். அதில், "பாஜக - அதிமுக கூட்டணி முறிவு என்பது நாடகம் அல்ல அந்த முடிவு என்பது தொண்டர்களுடைய முடிவு, அதில் எந்தவித மாற்றமும் இல்லை" என கூறி வருகிறார்.
மேலும், அதிமுக தலைமையில் அமையவிருக்கும் கூட்டணியை பலபடுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி பணிகளை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடந்த தேர்தலில் அதிமுக - பாஜகவுடன் கூட்டனி வைத்த காரணத்தினால் சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகள் அதிமுகவிற்கு இல்லாமல் போனது. அந்த வாக்கு வங்கியை பெறுவதற்கான செயல்பாடுகளில் தற்போது எடப்பாடி பழனிசாமி, சேலத்திலிருந்தே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நேற்று (அக்.03) எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு அரசியல் சந்திப்பாக இல்லை என்றாலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டனி முறிவு பெற்றுள்ள இந்த சூழலில் சந்தித்திருப்பது அரசியல் சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்தக் கட்டமாக எஸ்டிபிஐ கட்சியின் தலைமையிடமும் எடப்பாடி பேசவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல முன்னேற்றத்துடனும் களப்பணியுடனும் பரவலாக செயல்படக்கூடிய கட்சியாக எஸ்டிபிஐ பார்க்கப்படுகிறது. குறிப்பாக மற்ற இஸ்லாமிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிக இளம் வாக்காளர்களை கொண்ட கட்சியாகவும் கருதப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டனி முறிவு என்றவுடன் அதற்கு வரவேற்பும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக தெரிவிக்கபட்டது. குறிப்பாக திமுக கூட்டனியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு பெரும் இஸ்லாமிய கட்சிகள் இருப்பதால் மீதமுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை கூட்டனியில் இனைத்து ஏற்கனவே தேர்தலின்போது கைவிட்ட சிறுபாண்மையினரின் வாக்குகளை திரும்ப பெறுவதில் எடப்பாடி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி கூறியதாவது, "தற்போது வரை அதிமுக தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அழைப்பு ஏதும் வரவில்லை. ஆனால், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசி வருகின்றனர். ஒரு வேளை கூட்டனிக்கு அழைப்பு விடுக்கும்பட்சத்தில் அரசியல் சூழ்நிலையை கவனித்து பார்த்து, பின்னர் முடிவெடுக்கபடும்.
இந்த கூட்டனி முறிவு என்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவு போல் உறுதியாக இருக்கும்பட்சத்தில் கூட்டனி பற்றி சிந்திக்கலாம், அப்படி இல்லாத பட்சத்தில் அவசரத்தில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத. எங்களுக்கு கூட்டனிக்காக அழைப்பு விடுக்கும்பட்சத்தில் கட்டாயமாக அனைவரிடமும் தெரிவிப்போம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் நந்தன் சுவரைத் தகர்த்து வாசலைத் திறப்பாரா ஆளுநர் ரவி? - திருமாவளவன் கேள்வி!