ETV Bharat / state

அமலாக்கத்துறை என்றால் என்ன? அவர்களின் அதிகாரம் என்ன? - அமலாக்கத்துறை இயக்குநரகம்

Enforcement Directorate ( ED ): தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மத்திய அரசின் அமலாக்கத்தறை பற்றிய செய்திகள் அடிக்கடி நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக, தமிழ்நாட்டிலுள்ள அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை செய்தது மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாநில ஊழல் தடுப்பு காவல்துறை சோதனை செய்தது.. அமலாக்கத்துறை என்றால் என்ன? அவர்களின் அதிகாரம் என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்...

what-is-enforcement-directorate-what-is-ed-power
அமலாக்கத்துறை என்றால் என்ன? அவர்களின் அதிகாரம் என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 8:51 PM IST

ஹைதராபாத்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை குறித்து அதிகம் பேச காரணமாக அமைந்ததுலஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட சம்பவம்.

கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை குறித்து பேச்சு தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அடுத்தடுத்து தமிழக அமைச்சர்கள் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, தமிழ்நாடு அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற சோதனைகள் மற்றும் மத்திய அரசு மாநில அரசுகளைப் பயமுறுத்த அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பயன்படுத்துவதாகப் பல அரசியல் தலைவர்களின் கருத்துகளே காரணம்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டலத்தில், அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு காவல் துறையினர் சோதனை செய்வதற்காக வந்த போது உடனடியாக அமலாக்கத்துறைக்கு ஆதரவாக இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

பல்வேறு போராட்டத்திற்குப் பின் ஊழல் தடுப்பு காவல் துறையினர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சோதனை செய்தனர். இதனையடுத்து, சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு கொடுத்தனர். இப்படி பாதுகாப்பு விவகாரங்களின் மாநில அரசுக்கு சவால் விடும் வகையில் செயல்படும் அமலாக்கத்துறை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

யார் இந்த அமலாக்கத்துறையினர், அவர்களின் அதிகாரங்கள் என்ன?

மத்திய அரசின் நிதி சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் முதன்மையான அமைப்பாக அமலாக்கத்துறை உள்ளது. 1956ஆம் ஆண்டு மத்திய நிதி மற்றும் வருவாய்த் துறையின் கீழ் அந்நியச் செலாவணியை முறைப்படுத்தவும் பண மோசடி விசாரணை செய்யவும் அமலாக்கப்பிரிவு உருவாக்கப்பட்டது. பின் அமலாக்கத்துறை இயக்குநரகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. தற்போது அமலாக்கத்துறை என அழைக்கப்பட்டு வருகிறது.

அமலாக்கத்துறை அலுவலகம்: அமலாக்கத்துறை அலுவலகத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அதன் பிராந்திய அலுவலகங்கள் சென்னை மும்பை சண்டிகர் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களை அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர்கள் தலைமையின் கீழ் செயல்படும். மேலும் மண்டல அலுவலகங்கள் சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், சண்டிகர், பனாஜி, டெல்லி, கவுஹாத்தி, ஜெய்ப்பூர், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பாட்னா ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பல மாவட்டங்களில் உதவி மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

அமலாக்கத்தறை அதிகாரிகள் நியமனம்: ஐஆர்எஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ் மற்றும் வருமான வரி அலுவலர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுச் செயல்படுகின்றனர்.

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள்: FEMA (The Federal Emergency Management Agency) என்ற சிவில் சட்டத்தின் படியும், PMLA (Prevention of Money Laundering) என்ற குற்றவியல் சட்டத்தின் கீழ் முறையற்ற பணப் பரிமாற்றம் மோசடி மீது நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரம் என்ன?

  • பொருளாதார குற்ற வழக்கில் தொடர்வுடையவர்கள் இடங்களில் சோதனை செய்யலாம். அதில் சம்பந்தப்பட்டவர்களில் சொத்துக்களை முடக்கி வைக்க முடியும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யலாம்.
  • 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19ன் படி சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்களுக்குச் சம்மன் அனுப்புதல் சொத்துக்களைப் பிறமுதல் செய்யும் அதிகாரம் உள்ளது.
  • அமலாக்கத்துறையினர் இந்திய முழுவதும் எந்த இடத்திலும் விசாரணை மற்றும் சோதனை செய்யும் அதிகாரம் உள்ளது.

அமலாக்கத்துறையால் செய்ய முடியாதது:

  • அமலாக்கத்துறை எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்ய முடியாது.
  • மற்ற விசாரணை அமைப்புகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் விசாரணை செய்ய முடியும்.
  • அமலாக்கத்துறையின் பல வழக்குகள் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படும்.
  • அமலாக்கத்துறையினர் ஒருவரைக் கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.