ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின்...?

தமிழ்நாட்டில் 10 ஆண்டு செய்ய வேண்டிய சாதனையை ஓராண்டில் திமுக அரசு செய்திருக்கிறது. இதனை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்லமுடியும் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உண்மையில் திமுக அரசு என்ன சாதித்திருக்கிறது. இந்த தொகுப்பில் காணலாம்.

திமுக அரசின் நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின் dmk GOVERNMENT COMPLETED One year what-chief-minister-stalin-did-in-completion-of-one-year-dmk-rule தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? திமுக அரசின் நீட் முதல் திராவிட மாடல் வரை... OR திமுக அரசின்  ஓராண்டு சாதனைகள் - சோதனைகள்- எதார்த்தம் என்ன?

author img

By

Published : May 7, 2022, 2:21 PM IST

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

நீண்ட கால உழைப்பிற்கு பின் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முதலாக பதவி ஏற்றுக்கொண்டார். அதிலும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி அக்கட்சி தொண்டர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி பதவி ஏற்றுக்கொண்டார். அது, அடுத்த சில நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டதாக இருந்தது.

அரசின் முதன்மை நோக்கம்: இந்தநிலையில், ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்று ஓராண்டு முடிவடைகிறது. ஏறக்குறைய இரண்டாண்டு காலம் கரோனா தொற்று இருந்த காரணத்தால், உடனடியாக வேறு விஷயங்களில் திமுக அரசு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசின் முதன்மை நோக்கம் கரோனாவை கட்டுப்படுத்துவதில் தான் இருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் திராவிட மாடல்: அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஆட்சியை நடத்தி வந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்றுடன் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறார். இதனிடையே, திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடர் மாடல் என்று பேசத் தொடங்கினார். மேலும், நீட் விவகாரத்தில் திமுக கடந்த ஒரு வருடத்தில் “ஆட்டுக்குத் தாடியும் ஸ்டேட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை” என அண்ணா சொன்னதை டிரெண்ட் ஆக்கினர்.

மத்திய அரசு Vs ஒன்றிய அரசு: முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போது ஒன்றிய அரசு என எழுதத் தொடங்கினர். முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் “இந்தியாவிலிருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்” என விவாதத்தைத் தொடங்க, “இந்தியாவிலிருந்து மாநிலங்கள் பிரியவில்லை; எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலினின் கூட்டாட்சி தத்துவ முழக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று “ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. மாநிலங்கள் எல்லாம் சேர்ந்தது என்பதுதான் அதன் பொருள். ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது; அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம். பயன்படுத்திக்கொண்டே இருப்போம்” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசின் பல திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனையை ஓராண்டில்: அப்போது பேசிய முதலமைச்சர், "தமிழ்நாட்டில் 10 ஆண்டு செய்ய வேண்டிய சாதனையை ஓராண்டில் திமுக அரசு செய்திருக்கிறது. இதனை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்லமுடியும். மேலும், வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்" என்று மு.க.ஸ்டாலின் பேசினார். அதில், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அங்கு அவர் சொன்ன சாதனைகளின் பட்டியல் இது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக சாதனைகளாக ஸ்டாலின் சொன்ன பட்டியல்

  • தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினோம். இதுவரை தமிழ்நாட்டில் 91 விழுக்காடு பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
  • மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது.
  • கரோனா காலத்தில் நிவாரண நிதியாக நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து 4000 ரூபாய், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
  • கரோனா கால நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருள்கள் தரப்பட்டது.
  • பொங்கல் பரிசாக 22 மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
  • ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.
  • ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் யாரும் குறைப்பதற்கு முன்பாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோம்.
  • இலங்கையில் இருக்கக்கூடிய நம்முடைய தமிழர்கள் அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய அந்த இலங்கைத் தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • அது மட்டுமல்ல, நெசவாளர் கோரிக்கையான பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
  • அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
  • கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தள்ளுபடி, 14 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
  • மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்திருக்கிறோம்.
  • கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
  • கரோனாவால் பள்ளி இடைநின்ற குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பொதுமுடக்கக் கால கற்றல் இழப்பைச் சரிசெய்ய 'இல்லம் தேடி கல்வி' என்ற சிறப்பான திட்டம்.
  • காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி தொகுப்பு 61 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்னால் கால்வாய்களை முன்கூட்டியே தூர் வாரினோம். 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து இன்றைக்கு வரலாற்றுச் சாதனையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்.
  • 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, இதன் மூலமாக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை நாம் இன்றைக்கு உருவாக்கியிருக்கிறோம்.
  • மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 279 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.
  • இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு - 2,567 கோடி ரூபாய் திருக்கோயில் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

துன்பங்கள் துயரங்கள்தான்-அதிமுக விமர்சனம்: திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மக்களுக்குப் பயன் தராத, ஓயாத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்பதற்கேற்ப மீண்டும் அஇஅதிமுக ஆட்சி மலரும்" என்று தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்பட்ட திட்டங்களும் விமர்சனங்களும்: பல திட்டங்களை புதிதாக துவங்கியதாக திமுக கூறினாலும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த சில திட்டங்கள் நிறுத்தப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருந்த தாலிக்குத் தங்கம் நிதி உதவித் திட்டத்தில் மாற்றம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் மற்றும் இலவச ஆடு மாடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளதும் விமர்சனங்களை முன்வைக்க காரணமாக அமைந்துள்ளது. ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட இந்தியாவுக்கே முன்னோடியான அம்மா உணவகத் திட்டம் சரிவர செயல்படுத்தவில்லை என்பது அதிமுகவினரின் மனக்குறையாக உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"சாதனைகள் அல்ல சோதனைகள்"

அமமுக பொதுச்செயலாளரான தினகரன் திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில் சோதனைகள் தான் அதிகம் என்கிறார்.

  • சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னவர்கள், இப்போது மனசாட்சியே இல்லாமல் சொத்து வரியை 150 % உயர்த்தி மக்களை வதைக்கிறார்கள்.
  • ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்றவர்கள் இப்போது தீர்மானம் நிறைவேற்றியதாகப் பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள்.
  • 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் வைத்த நகைக்கடன் எல்லாம் தள்ளுபடி என்றார்கள். இப்போது எதேதோ கணக்குகளைச் சொல்லி நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்தாகிவிட்டது என்று வாய்கூசாமல் அடித்து விடுகிறார்கள்.
  • மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுவோம் என்று இவர்களால் முடியாது என்று தெரிந்தும் பச்சையாகப் பொய் வாக்குறுதியைக் கொடுத்தார்கள்.
  • அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு அதைப்பற்றி மூச்சே விட மறுக்கிறார்கள்.
  • கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து முன் களப்பணியாளர்களாகச் சேவையாற்றிய மருத்துவர்களையும் , செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் , இப்போது அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.
  • அம்மா மினி கிளினிக்குகளை மூடி அதில் வேலைபார்த்த மருத்துவர்களையும் , செவிலியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
    டிஆர்பி ( TRB ) தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, இப்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
  • காவல்துறையின் பணிப்பளுவைக் குறைக்கும் வகையில் பங்காற்றும் ஊர்க்காவல் படை வீரர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் தினகரன். ஓராண்டு நிறைவு நாளான இன்றும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். ஆனால் நகர்ப்புற மருத்துவமனைகள் உள்ளிட்டவை அதிமுகவின் அறிவிப்புகள் மிதான ஸ்டிக்கர்கள் தான் என விமர்சிக்கிறது அதிமுக.

இதையும் படிங்க: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் அசுரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.