ETV Bharat / state

காணும் பொங்கல்..சென்னையில் பொதுமக்களுக்கு செய்யபட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - சென்னை செய்திகள்

சென்னையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறையினர் செய்துள்ளது.

காணும் பொங்கல்..சென்னையில் பொதுமக்களுக்கு செய்யபட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

author img

By

Published : Jan 15, 2023, 8:58 PM IST

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசாம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரை கடற்கரையில் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அங்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை காவல் துறையினர். அதன்பேரில் உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் பாதுக்காபில் ஈடுபடுவார்கள்.

மேலும் 15 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள், அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள். காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்கபடமாட்டர்கள்.

கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 11 காவல் உதவி மையங்கள் மற்றும் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல் கட்டுப்பாட்டறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.

மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் அதிநவீன ட்ரோன் கேமிராக்கள் மூலம் சமூக விரோதிகள் குற்ற செயல்கள் ஈடுபடுகிறார்களா என போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை. புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காவல் குழுவினர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு. பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Nepal Plane Crash: நேபாளத்தில் 72 பேருடன் பயணிகள் விமானம் விபத்த

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.