சென்னை: அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் அடுத்த 4 மாதங்களில், உட்கட்சித் தேர்தலை நடத்த பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலுக்கான அதிகாரிகளாக, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக போட்டியிட விரும்புபவர்கள் வேண்டிய தகுதிகள் குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பொதுக்குழுவில் அறிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு ஒற்றை தலைமையாகப் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்படும்.
பொதுச்செயலாளராக போட்டியிட விரும்புபவர்கள் அதிமுகவில் 10 ஆண்டு தொண்டராக இருக்க வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும் என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பொதுக்குழுவில் அறிவித்துள்ளார்
இதையும் படிங்க: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம்!