2020 ஜூன் 21ஆம் தேதி வரும் சூரிய கிரகணம் எப்படி இருக்கும்?
பதில்: காலை 10:22 முதல் 1: 40 வரை ஏற்படும் சூரிய கிரகணத்தில் கரோனா வைரஸ் குறையும் என்றால் அது தவறு. கரோனா கட்டுப்படுத்தல் வழிமுறைகள், மருந்துகள் எடுத்தால் மட்டுமே கரோனா மறையும்.
மீண்டும் ஒரு வைரஸ் பரவல் இருப்பதற்கான அனைத்து அமைப்புகளும் பஞ்சாங்கத்தில் உள்ளது. அதேபோல் உலகத்தில் குறிப்பாக இந்தியாவில், பஞ்ச பூதத்தால் ஆபத்து ஏற்படும் வண்ணம் உள்ளது. அதில் டெல்லி, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. புயல்களும் கடுமையாக இருக்கும் என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுடனான உறவு?
எல்லை நாடுகளுடன் கட்டாயம் பிரச்னை இருக்கும். மற்ற நாடுகள் நமக்கு ஆதரவு கிட்டும். பாகிஸ்தான், சீனா, நேபாளம் ஆகிய நாடுகளால் நமக்கு பிரச்னை ஏற்படும். அதுமட்டுமின்றி நமது நட்பு நாடான இலங்கையும் நமக்கு பிரச்னை ஏற்படுத்தலாம்.
2020 இந்தியாவிற்கு சோதனைக் காலம். 2020 டிசம்பர் மாதத்தில் இந்தியா மீண்டு எழும். அப்படி மீண்டெழுந்து தனித்துவமான, பெரிய நாடாக உருவெடுக்கும்.
இந்திய பொருளாதாரம், அரசியலில் மாற்றம் ஏற்படுமா?
2020 -2022 அக்டோபர் மாதம்வரை பொருளாதார சிக்கல் ஏற்படும். கடல் கடந்து வாழும் மக்கள் தாய் நாட்டிற்கு வந்தால் நன்மை பயக்கும்.
சூரிய கிரகணத்தில் செய்யக்கூடியவை? செய்யக்கூடாதவை?
கிரகணம் 10.22 மணிக்கு வருவதால், கிரகணம் வருவதற்கு முன் சாப்பிட்டு குளித்தால் நல்லது. பின் தங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை வணங்குவதும் நல்லது. கர்ப்பிணிகளும், வயதானவர்களும் பத்திரமாக இருக்க வேண்டும். திரைச் சிலைகள் வைத்து அறையை இருட்டாக வைத்து கொள்ளவும். மனதிற்கு பிடித்த பாடல்கள் கேட்கலாம். இந்த கிரகணத்தில் இவற்றை கடைப்பிடித்தாலே நன்மை பயக்கும்.
இதையும் படிங்க...சென்னையிலிருந்து வெளியேறத் துடிக்கும் மக்கள்!