ETV Bharat / state

முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள்?

author img

By

Published : May 3, 2021, 10:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன ஒரு பார்வை..

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சராக, இக்கட்டான சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவர்முன் பல்வேறு சவால்கள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், மருத்துவம், கல்வி , பொதுச் சுகாதாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலுள்ள பல்வேறு சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

மருத்துவத் துறை சவால்கள்

கரோனா தொற்றின் முதல் அலை குறைந்த நிலையில், சரியாகக் கட்டுப்படுத்த தவறியதால் தற்போது இரண்டாவது அலையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. தினம்தோறும் 20 ஆயிரம் பேருக்குத் தொற்று என்ற இலக்கை தமிழ்நாடு எட்டியுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த மனிதவளம் நிறையத் தேவைப்படுகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மருத்துவர்கள் செவிலியர்கள், லேப் டெக்னீசியன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கரோனாவால் உயிர் நீத்த முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை குறைக்காமல் மீண்டும் அதே போல் வழங்க வேண்டும். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் உடனே நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.

கரோனாவைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சமாக, 14 நாட்கள் முழு ஊரடங்கினை அமல்படுத்த முன்வர வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மருத்துவ வல்லுநர்களை கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியக் கட்டாயத்தில் அரசு உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல் நீட் தேர்வு ரத்து என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை; இது மிகப்பெரிய சவலாக அரசுக்கு இருக்கும் என வல்லுநர்கள் என்கின்றனர்.

விவசாயிகளின் தோழன் ஸ்டாலின்
விவசாயிகளின் தோழனா ஸ்டாலின்

கல்வித்துறை முன் சவால்கள்

கரோனா பெருந்தொற்றால் கல்வி பயில்வது தடைப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குழந்தைகளின் கல்வி, மனநிலை, சத்துணவு சென்று சேர்க்கிறதா என ஆய்வு வேண்டும். ஆன்லைன் வழி கற்பதால் அனைத்து தரப்பினருக்கும் கல்வி சமமாகக் கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டிய வகையில் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். கற்றலை எளிமையாக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் இணைய வழி கற்பதால் போதிய வகையில் தேர்ச்சி பெற முடிவதில்லை. பொறியியல் மாணவர்கள் 30 விழுக்காடு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கலைஞரிடம் ஆசி பெறும் வருங்கால முதலமைச்சர்
கலைஞரிடம் ஆசிப் பெறும் ஸ்டாலின்

கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். உயர் கல்வியில் ஒற்றை சாளர முறை சேர்க்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும், இதனால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள், ஆராய்ச்சி துறை மாணவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்வாகம் மீட்டெடுக்கப்படுமா?

தமிழ்நாடு அரசு கடன் சுமை 4 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை ரூபாய் 3, டீசல் விலை ரூபாய் 2 குறைக்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், நிதி ஆதாரங்களை பெருக்குவது குறித்து நடவடிக்கை தேவைப்படுகிறது.

மத்திய அரசில் ஜிஎஸ்டியில் மாநில அரசின் பங்கைக் கேட்டு பெற வேண்டி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடைபெறாததால் உள்ளாட்சி நிதி கேட்டு பெறுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். தனிநபர் வருமானத்தை பெருக்க நடவடிக்கை தேவை, அதே போல் கனிம வளம் தனித் துறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.

மணலை அரசு நேரடியாக கொள்முதல் செய்து நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும், குறிப்பாக டாஸ்மாக் வழியில் அல்லாமல் வேறு வகையில் நிதியை பெருக்க அரசு துறை வல்லுநர்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வேலைவாய்ப்பு சவால்

கரோனா போன்ற நெருக்கடி நேரத்தில் பலர் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். குறிப்பாக, ரூ.4 ஆயிரம் நிதியை குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதே போல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை தேவை.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளதால், பொருளாதாரம் சகஜ நிலைக்கு உடனே திரும்ப வாய்ப்பு குறைவு. அதனால், மகளிர் சுய உதவிக் குழு மூலம் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்குவது, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் உதவியுடன் புது வாய்ப்புகளை உருவாக்குவது, தனியார் துறையில் 75% தமிழர்கள் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள்?

சுற்றுச்சூழல் துறை முன் உள்ள சவால்கள்

கூவம் நதிக்கரையைத் தூய்மையாக்க வேண்டும். பல ஆண்டுகளாகக் கட்டி முடிக்கப்படாத மேம்பாலங்களை உடனே கட்டி முடிக்க வேண்டும். வன உயிரினங்கள், சாலை விபத்துகளிலும், மனித மோதல்களாலும் உயிரிழப்பு குறித்து சிறப்பு வல்லுநர் குழு உதவி உடன் சிறப்புத்துறை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் ஆபத்தான நிலையில் உள்ளதால் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு இது குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாகப் பதவியேற்கும் அரசு பெரும்பான்மை உள்ள அதே சூழலில், தமிழ்நாடு சார்ந்த திட்டங்களுக்கு எதிர்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து இணக்கமான முறையில் அரசை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.