ETV Bharat / state

வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

வாக்குப்பதிவு அன்று அரசியல் கட்சிகள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்று வெளியிடப்பட்டுள்ளது.

What are procedures to be followed on polling day? - Chief Electoral Officer  polling day procedures  வாக்குப்பதிவு விதிமுறைகள்  தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு அறிக்கை  தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்  சத்யபிரதா சாகு  Satyaprada Saku  வாக்குப்பதிவு நடைமுறைகள்  Voting procedures  Chief Electoral Officer of Tamil Nadu
polling day procedures
author img

By

Published : Apr 4, 2021, 10:10 AM IST

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 அன்று காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை நடைபெறும்,

இன்று (ஏப். 4) மாலை 7 மணிமுதல் வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126இன்கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:

  1. தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
  2. யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி, இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
  3. பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தையும் யாரும் பரப்புரை செய்யக்கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் சட்டப்பிரிவு 126 (2)இன்படி, இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
  4. தொகுதி வெளியேயிருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர், அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று (ஏப். 4) மாலை 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
  5. கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாள்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
  6. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று (ஏப். 4) மாலை 7 மணிமுதல் செயல்திறனற்றதாகிவிடும்.
  7. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் பின்வரும் எண்ணிக்கையில் வாகன அனுமதி அத்தொகுதியில் பெற உரிமை உண்டு. அவை வருமாறு (i) அவரது சொந்தப் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் (ii) தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், (iii) கூடுதலாக, அவரது பணியாளர்கள் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
  8. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. இது 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
  9. இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிகப் பரப்புரை அலுவலகம் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

இதையும் படிங்க: தபால் ஓட்டை திமுகவிற்கு மாற்றி போட்ட அலுவலர்: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.