வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடன் பதினான்கு நாட்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு லண்டன் சென்றடைந்தார்.
லண்டன் விமான நிலையம் வந்தடைந்த அவரை, லண்டனில் வசிக்கும் தமிழர்கள் மாலை அணிவித்தும் பூக்கொத்துகளை அளித்தும் உற்சாகத்துடன் வரவேற்றனர். லண்டன் சென்ற முதலமைச்சர் அங்கிருக்கும் தொழில் முதலீட்டாளர்களையும் மருத்துவ மேம்பாடு முறைகளையும் கண்டறிந்து நம் நாட்டில் செயல்படுத்தும் வகையில் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறை சார்ந்த செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.