ETV Bharat / state

பொளந்துகட்டும் வெயில் - சக்கைபோடு போடும் குளிர்பான விற்பனை! - குளிர்பான கடையை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்

சென்னையில் வெயிலின் தாக்கத்தால் தாகத்தைத் தணிக்க குளிர்பானக் கடையை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு-குளிர்பான கடையை நோக்கி படையெடுக்கும் மக்கள்..!

author img

By

Published : May 24, 2022, 7:21 PM IST

சென்னை: மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு சில நாட்கள் மழைபெய்தது. மே மாத தொடக்கத்தில் இருந்து சற்று வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. மே மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலையாக சென்னையில் 40.2 டிகிரி பாரன்ஹீட் நேற்றைய(மே23) தினம் பதிவு ஆகியுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க குளிர்பானக் கடையை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பாதாம்பால், ஜிகர்தண்டா, ரோஸ் மில்க், புரூட்ஸ் மில்க், கரும்பு சாறு போன்ற குளிர்பானங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. மேலும் கம்மங்கூழ், இளநீர் போன்றவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. குளிர்பானங்களின் விற்பனை அதிகரிப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களும் குளிர்பானங்களை விரும்பி வாங்கி அருந்திவிட்டுச் செல்கின்றனர்.

இதையும் படிங்க:வனவிலங்குகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.