ETV Bharat / state

முகக்கவசம் வழங்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதில்! - முகக்கவசம் வழங்க கோரிய வழக்கு

சென்னை: மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு மருத்துவ பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் 2 நாள்களுக்கு ஒருமுறை கவச உடைகள் தடையில்லாமல் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

chennai
chennai
author img

By

Published : Jul 30, 2020, 9:32 AM IST

கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் கரோனா சிகிச்சை மையங்களில் பணியில் உள்ளவர்களின் விவரங்கள், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், "இரண்டு நாள்களுக்கு ஒரு முறையென தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், இணை, துணை சுகாதார ஆணையர் அலுவலகங்கள், 108 ஆம்புலன்ஸ்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள், சென்னை மாநகராட்சியின் சுகாதார அலுவலர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தேவையானதை விட கூடுதல் அளவிலான N95 முகக் கவசங்கள், மூன்றடுக்கு முகக்கவசங்கள், முழு கவச பாதுகாப்பு உடைகள் (PPE) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் பணியாற்றும் பிற ஊழியர்கள், கரோனா சிகிச்சையில் முன் களப்பணியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த 10 ஆயிரத்து 336 பணியாளர்களுக்கு நாள்தோறும் முழு உடல் கவசம் வழங்கப்படுகிறது.

மாவட்ட வாரியாக உள்ள கையிருப்பு, தலைமையிடத்தில் உள்ள கையிருப்பு என கடந்த ஜூலை 23ஆம் தேதி நிலவரப்படி, 6 லட்சத்து 52 ஆயிரத்து 695 முழு உடல் கவசங்கள், 5 லட்சத்து ஆயிரத்து 826 N95 முகக்கவசங்கள், 54 லட்சத்து 17 ஆயிரத்து 974 மூன்றடுக்கு முகக்கவசங்கள், 3 ஆயிரத்து 384 வென்டிலேட்டர்கள், கரோனா பரிசோதனை செய்வதற்கான 2 லட்சத்து 78 ஆயிரத்து 505 பி.சி.ஆர் கருவிகள், ஆர்என்ஏவை பிரித்தெடுப்பதன் மூலம் கரோனா தொற்றை கண்டறிய உதவும் 3 லட்சத்து 41 ஆயிரத்து 294 ஆர்என்ஏ கிட்கள் (RNA KITS) சேமிப்பில் உள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் நாள்தோறும் 3ஆயிரத்து 70 மருத்துவர்கள், 3 ஆயிரத்து 591 செவிலியர்கள், 3 ஆயிரத்து 705 துணை மருத்துவப் பணியாளர்கள் என 10 ஆயிரத்து 366 பேர் பணியாற்றி வருகின்றனர். கரோனா வார்டில் ஷிப்ட் முறையில், மூன்று ஷிப்ட்கள் என்ற அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு அனுமதி? - மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.