சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதில் ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்காக 5 ஆயிரத்து 284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து http://election.chennaicorporation.gov.in என்ற 'நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்-2022' இணையதளத்தில், Know your Zone and Division என்ற இணைப்பில் மண்டலங்கள், வார்டுகளின் அமைவிடங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், Know your Polling Station என்ற இணைப்பை கிளிக் செய்தால் மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்காளர் பெயர், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், வாக்குச்சாவடி விவரம், வாக்காளர் பட்டியலின் பாகம் எண், வரிசை எண் குறித்த விவரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சென்னையில் 5 இடங்களில் தேர்தல் மற்றும் கரோனா விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு - ககன்தீப் சிங் பேடி