கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் ஆறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தினை விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி, இன்று முதல் இணையதளத்தில் பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தைத் தனியார் மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
https://tnmsc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு மருந்தினை பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிவிப்பால், மக்கள் முந்தியடிக்காமல் மருந்தினை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும், மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்து விவரங்களை அறிய https://ucc.uhcitp.in/publicbedrequest என்ற இணையதளமும் தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.