சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் பிரபலமான பிரியாணிக் கடை தொப்பி வாப்பா பிரியாணிக் கடை. இங்கு அடிக்கடி மக்களுக்கு வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடுவர்.
காதலர் தினத்தன்று முரட்டு சிங்கிலுக்கு இலவச பிரியாணி, தண்ணீர் பஞ்சத்தின்போது பிரியாணிக்கு ஒரு கேன் தண்ணீர், வெங்காயம் விலை ஏற்றத்தின்போது பிரியாணிக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம் இப்படி பல சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுபோன்ற வித்தியாசமான அறிவிப்புகள் மூலம் மக்கள் மத்தியில் வெகுவாக ஈர்க்கப்பட்ட தொப்பி வாப்பா பிரியாணி கடை, கைத்தறி நெசவு தொழிலை காப்பாற்றும்விதமாகவும், இளைஞர்களிடம் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிக்கும்விதமாகவும் தற்போதும் ஒரு வித்தியாச அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி உலக வேட்டி தினமான ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெள்ளை வேட்டி அணிந்துவரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்துள்ளது.
மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும்விதமாக, ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கைத்தறி வேட்டி, துண்டு இலவசம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘பணம் வாங்குனியே... ஓட்டு போட்டியா’ - வாக்காளர்கள் மீது கோபித்துக்கொண்ட வேட்பாளர்!