சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட 14 மாவட்டச்செயலாளர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ”அதிமுக ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் உள்ளது. தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கம்தான் உள்ளனர்.
அதிமுகவில் இருந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டோம். பணத்திற்கு விலை போனவர்கள்தான் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கம்தான் உள்ளனர். அதிமுக அலுவலகத்திற்குச்செல்ல ஓ.பன்னீர்செல்வம் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?
கலவரம் நடக்கும் முன்னாள் இரவு, அதிமுக அலுவலகத்தில் ஆதி ராஜாராமுக்கு 2 மணி அளவில் என்ன வேலை? கடந்த சில தினங்களுக்கு முன்பு கலவரம் தொடர்பாக புகார் அளித்த அதிமுகவின் சி.வி. சண்முகம் புகார் கொடுக்கும்போது நிதானத்தில் தான் இருந்தாரா?
எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச்செல்லும்போது கதவை மூடிவிட்டதால் திரும்பிவந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எப்போது வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்கிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்!