ETV Bharat / state

'பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் கமலாலயம் முற்றுகையிடப்படும்' - ரஞ்சன் குமார் எச்சரிக்கை - Congress Ranjan Kumar

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் பாஜகவின் தலைமையிடமான கமலாலயம் முற்றுகையிடப்படும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ரஞ்சன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
author img

By

Published : Oct 5, 2021, 9:06 PM IST

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ஒருவரின் மகன் கார் ஏற்றியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் மேலும் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று (அக். 5) பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ரஞ்சன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், உபி முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்க்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சன் குமார், "பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பிரியங்கா காந்தி விரைவில் விடுவிக்காவிட்டால் நாளை (அக்.6) சென்னையில் உள்ள பாஜக தலைமையிடமான கமலாலயம் முற்றுகையிடப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதையும் படிங்க: எந்த விசாரணைக்கும் மகன் தயார் - அமைச்சர் அஜய் மிஸ்ரா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.