சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 6) ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், "உச்சநீதிமன்றம் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என கூறியிருந்தாலும், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயர்நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். கோடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தருவது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் விருப்பம்" எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை - உச்ச நீதிமன்றம் உத்தரவு