ETV Bharat / state

'சமூக வலைதளங்களில் இழிவுபடுத்துவோரை தண்டிக்க வேண்டும்' - வைகோ

சென்னை: அரசியல் கட்சிகள், சமூகநல இயக்கங்கள் மற்றும் மக்கள் தொண்டு ஆற்றுவோர் ஆகியோரைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இழிவுபடுத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ
வைகோ
author img

By

Published : Jul 20, 2020, 1:37 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை தியாகராயர் நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.

குஜிலியம்பாறை ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நடத்திவந்த ஃபேஸ்புக் பக்கம் "கம்யூனிசம் வென்றே தீரும் மார்க்சிய வழியில்" என்பதாகும். இதில் மெல்ல மெல்ல புகுந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர், கடந்த ஒரு வாரமாக தங்கள் காவி கழிசடைப் பதிவுகளை அந்தக் குழுவில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர்.

அதில், பாலன் இல்லம் படத்தைப் போட்டு, ‘விபச்சார விடுதி’ என்று ஆபாச வார்த்தையைப் பதிவிட்டும், இடதுசாரி சிந்தனையாளரும், பெண்ணுரிமைச் செயல்பாட்டாளருமான தோழர் ஒருவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தவறான நோக்கத்துடனும், அவதூறாகவும் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜூலை 17ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும், காவல் துறையினர் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னணி என்ன? இந்தப் போக்கு நீடிப்பது நல்லதல்ல.

இந்த மோசமான குற்றச்செயல் ஒருவரால் மட்டும் செய்யப்படக் கூடியது அல்ல. மதவெறி, சாதிவெறி மூலம் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் சதிகாரக் கும்பல்கள்தான் இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஆட்சி அதிகாரம் தங்களுக்கு அரவணைப்பாக இருக்கும் ஒரே காரணத்தால், எந்த எல்லைக்கும் சென்று வெறியாட்டம் போடலாம், கொச்சைப்படுத்தலாம் என்ற போக்கில் மதவாத சக்திகள் கண்மூடித்தனமாக ஈடுபட்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், மக்கள் தொண்டு ஆற்றுவோர் ஆகியோரை ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து இழிவுபடுத்துவோரை நுண்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.