சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் நியூ காலனியை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது கணவர் விஜயகுமார். இவர்கள் கோயம்பேடு பகுதியில் சாலையோரம் தள்ளு வண்டியில் சாப்பாடு கடை நடத்தி வந்தனர்.
வியாபாரத்துக்காக வானகரம் பகுதியில் மீன் வாங்க கணவன், மனைவி இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதியது. இதில் காளியம்மாள் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானர். விஜயக்குமார் உள்பட மூவர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து காளியம்மாளின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியை கைப்பற்றிய காவல்துறையினர் தப்பி ஓடிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.