ETV Bharat / state

தண்ணீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் - தண்ணீர் பஞ்சம்

சென்னை: மழையில்லாமல் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறினார்.

thirunavukarasar
author img

By

Published : Jun 23, 2019, 10:48 PM IST

சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை இருப்பது உண்மை. சென்னை உள்பட பல மாவட்டங்களில் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கிராமங்களில் குளம், ஏரி ஆகியவற்றில் தண்ணீர் இல்லை, கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத நிலை. மத்திய அரசை அணுகி தமிழ்நாடு அரசு நிதியை ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு தண்ணீர் பஞ்சம் இல்லை, யாகம் செய்துவிட்டோம் என்று சொல்வதில் எந்தவித பயனும் இல்லை. யாகம் செய்து மழை பெய்தால் தொடர்ந்து யாகம் நடத்தட்டும். யாகம் ஒரு பக்கம் நடந்தாலும் மக்களுக்கு தண்ணீர் விநியோகமும் நடக்க வேண்டும்.

பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான். தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கித் தரவேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளும்கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தல்களில் தோல்வி கிடைக்கும் என்று ஆளும்கட்சிக்கு தெரியும். இதனால் தேர்தலை தள்ளிப்போட தான் முயற்சிப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் குறித்து பேசுவோம். கூட்டணி பற்றி பேசவோ, விவாதம் செய்யவோ அவசியமில்லை' என்றார்.

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் விமான நிலையத்தில் பேட்டிBody:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்ததும் கூட்டணி பற்றி பேசப்படும் இப்பொழுது விவாதம் செய்ய அவசியமில்லை
சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி;

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை இருப்பது உண்மை. சென்னை உள்பட பல மாவட்டங்களில் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க கூடிய சூழ்நிலை இருக்கிறது. கிராமங்களில் குளம், ஏரி ஆகியவற்றில் தண்ணீர் இல்லை. கால்நடைகளும் தண்ணீர் இல்லாத நிலை. தண்ணீர் பிரச்சனை இல்லை அவற்றை தீர்க்கப்பட்டதாக அரசு சொல்லிக் கொண்டு இருந்தால் மக்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கும். தமிழகத்தில் உள்ள யதார்த்ததை ஏற்றுக் கொண்டு அரசு தீர்வு காண வேண்டும். அதிமுக யாகம் செய்தால் நல்லது. அதற்காக உடனே மழை வந்துவிடுமா. யாகம் நடத்தி மழை பெய்தால் சந்தோசம். அதற்காக பூஜையை மட்டும் நம்பி இருக்க முடியுமா. இதனால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடுமா. அரசு தேவையான நிதியை ஒதுக்கி தண்ணீர் தேவைப்படும் இடங்களில் வினியோகம் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து கணிசமான நிதியை வாங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பிக்களும் தங்களது தொகுதி நிதியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய லாரிகளை வாங்கி தர வேண்டும். எம்.பிக்கள் நிதி வர 3 மாதங்கள் ஆகும். அதுவரை அரசு லாரிகளை வாடகைக்கு வைத்து தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும்.

பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான். தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி தரவேண்டும். பிரதமர் நிதியில் இருந்தும் ஒதுக்கி தரவேண்டும்.

மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை ஒதுக்கி போர்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு தண்ணீர் பஞ்சம் இல்லை. யாகம் செய்துவிட்டோம் என்று சொல்வதில் எந்தவித பயனும் இல்லை.

யாகம் செய்ததால் மழை பெய்தால் தொடர்ந்து யாகம் நடத்தட்டும். இது ஒரு பக்கம் நடத்தாலும் மக்களுக்கு தண்ணீர் வினியோகமும் நடக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக இருக்க சட்டம்-ஒழுங்கு மிகவும் முக்கியமானது. பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருக்க போலீஸ் துறை முலமாக உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்.

கட்சிக்காரர்கள் செய்யும் செயல்கள், வெட்டு குத்துகளில் எந்தவித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் அரு தவறு தான். குற்றவாளிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களா இருந்தாலும் சமூகவிரோதிகளாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போலீசாரை இதர பணிகளுக்கு அனுப்பாமல் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

மேலும் பா.ஜ.க. அரசு ஆட்சியில் இருந்தாலும் கங்கை தூய்மையாக போவதில்லை. அதற்காக செலவிடப்படும் பணம் தான் தூய்மையாகும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிகள் செலவாகியும் கங்கை தூய்மையாகவில்லை. பணத்தை ஒதுக்கி பணிகளும் நடக்க வேண்டும். கங்கை பெயரில் பணத்தை ஒதுக்கி அதை சாப்பிடுவது பாவம்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவே இல்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் நடக்கவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என லட்சக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும்கட்சி படுதோல்வி அடைந்து உள்ளதால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. வரும் தேர்தல்களில் தோல்வி கிடைக்கும் என்று ஆளும்கட்சிக்கு தெரியும். இதனால் தேர்தலை தள்ளி போட தான் முயற்சிப்பார்கள்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் பேசுவோம். கூட்டணி பற்றி பேசவோ விவாதம் செய்யவோ அவசியமில்லை.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.